தசமபாகம் செலுத்துதல் TITHING ஆதியாகமம் 14:20 ...ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான். யோவான் 8:39 ...இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே. மல்கியா 3:8-11 மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே. நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள். என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும் படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். எபிரேயர் 7:4-10 இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம் முதலாய் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான். லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அரையிலிருந்துவந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைபெற்றிருக்கிறார்கள். ஆகிலும், அவர்களுடைய வம்சவரிசையில் வராதவனாகிய இவன் ஆபிரகாமின் கையில் தசமபாகம் வாங்கி, வாக்குத்தத்தங்களைப் பெற்றவனை ஆசீர்வதித்தான். சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதற்குச் சந்தேகமில்லை. அன்றியும், இங்கே, மரிக்கிற மனுஷர்கள் தசமபாகம் வாங்குகிறார்கள்; அங்கேயோ, பிழைத்திருக்கிறான் என்று சாட்சிபெற்றவன் வாங்கினான். அன்றியும், மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோனபோது, லேவியானவன் தன் தகப்பனுடைய அரையிலிருந்த படியால், தசமபாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாய்த் தசமபாகம் கொடுத்தான் என்று சொல்லலாம். சபை கட்டிட நிதிக்காக தசமபாகத்தை உபயோகிப்பது தவறா? நல்லது. இப்பொழுது, இங்கே- இது சபைக்கு உணர்ச்சியைத் தூண்டக்கூடிய ஒரு சிறு காரியம். சரியான முறை என்னவெனில், தசமபாகம் சபையின் போதகருக்கு செல்ல வேண்டும். அது தான் சரி! வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டில், ஆலயத்தை பழுது பார்ப்பதற்காக, அவர்கள் ஒரு பெட்டியை கதவண்டையில் வைத்தனர். ஜனங்கள் அந்த பெட்டியில் பணத்தைப் போடுவார்கள்... அதை பலமுறை நீங்கள் பழைய ஏற்பாட்டில் படித்திருக்கிறீர்கள். அவ்விதமாகத்தான் அவர்கள் ஆலயங்களை பரிபாலித்தனர்... அந்த நிதியை உபயோகித்து தான் அவர்கள் ஆலயங்களை பழுது பார்த்தனர். ஆனால் பத்தில் ஒரு பாகம் தசம பாகம் அனைத்தும் அவர்களுடைய ஆசாரியர்களுக்கு, அவர்களுடைய மேய்ப்பர் களுக்கு சென்றது. ஆம், தசமபாகத்தை வேறெதற்கும் உபயோகிக்கக் கூடாது. ஜனங்கள் தங்கள் தசமபாகத்தை எடுத்து விதவைகளுக்கு கொடுப்பதை நான் கண்டிருக்கிறேன். அது தவறு. விதவைக்கு கொடுக்க உங்களிடம் வேறெதாவது இருக்குமானால், அதைக் கொடுங்கள், ஆனால் அவளுக்கு தேவனுடைய பணத்தை கொடுக்காதீர்கள். முதலாவதாக, அது உங்களுடையதல்ல. அது தேவனுடையது. உங்களுக்கு ஒரு ரொட்டி வாங்கி வருவதற்காக என்னிடம் நீங்கள் இருபத்தைந்து சென்டு காசு கொடுத்தனுப்பி, நான் தெருவில் ஒருவரை சந்தித்து அவருக்கு இந்த இருபத்தைந்து சென்டு காசை கொடுத்து விடுவேனானால். பாருங்கள், நான் உங்கள் காசை எடுத்து கொடுத்து விடுகிறேன். அவர் என்னிடம் காசு கேட்டால், என் பாக்கெட்டில் உள்ள என் காசை அவருக்கு நான் கொடுக்கவேண்டும். இது உங்கள் காசு. அதை எடுத்து கொடுத்துவிடக்கூடாது. அது போன்று தசமபாகம் கர்த்தருடையது. ஆசாரியனாகிய லேவி தசமபாகத்தை கொண்டே வாழ வேண்டும். தசமபாகம் பண்டகசாலையில் கொண்டுவரப்பட்டு, அது தேவனால் ஆசீர்வதிக்கப்படும் என்னும் வாக்குத்தத்தையும் அதன் நிரூபணத்தையும் உடையதாய் இருக்கிறது. அவர், 'நீங்கள் என்னை நம்பாமல் போனால், அதைக்கொண்டு வந்து நான் அதை ஆசீர்வதிக்கமாட்டேனோ என்று என்னை சோதித்துப் பாருங்கள்' என்கிறார் (மல்:3:10). பாருங்கள்? அது உண்மை. தசமபாகம் சபையின் போதகரின் ஜீவனத்துக்கென அவருக்கு செல்லவேண்டும். கட்டிட நிதி இன்னும் மற்றவை எல்லாம் முற்றிலும் வேறுபட்ட நிதி. அது வேதப்பூர்வமானது. கேள்விகளும் பதில்களும் (COD 2:14) அக்டோபர் 15, 1961 காலை நான் சிறுவனாயிருந்தபோது, ஒரு சமயம் வியாதிப்பட்டது என் நினைவுக்கு வருகின்றது. நான் இரண்டாயிரம் டாலர்கள் கடன்பட்டு, மருத்துவமனையிலிருந்து வெளிவந்தேன். திரு.ஸ்வானிகர் என்பவர் வைத்திருந்த மருந்து விற்பனை ஸ்தலம் ஒன்று இங்கு முன்பிருந்தது. அவரிடம் மருந்து வாங்கினதால், நான் முன்னூறு அல்லது நானூறு டாலர்கள் கடன்பட்டேன், அவருக்கு என்னைத் தெரியாது. அந்த மனிதன்... நான் அவரிடம் சென்றேன். எனக்கு அவரைத் தெரியாது. ஆயினும் அவர் மருந்தை அங்கு அனுப்பிக்கொண்டிருந்தார். அதை அனுப்ப அவர் மறுக்கவேயில்லை. நான் அவரிடம், 'உங்களுக்கு நான் கடன் தரவேண்டும்' என்றேன். நான் கூறினேன்... அது ஸ்வானிகர் அல்ல, கோர்ட் அவின்யூ அண்டு ஸ்பிரிங் என்னுமிடத்தில் திரு.மேசன் என்பவர். நான் அவரிடம், 'உங்களுக்கு நான் கடன் தரவேண்டும். நான் இன்னும் மிகவும் பலவீனமாயுள்ளேன். எனினும் நான் வேலைக்குச் செல்ல முயன்று வருகிறேன். என்னால் செலுத்த முடியாவிட்டால்...', நான் அப்பொழுதுதான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட சமயம். நான் அவரிடம், 'திரு.மேசன் அவர்களே, முதலாவதாக தேவனிடம் எனக்கு ஒரு கடமையுண்டு. அவருக்கு தசமபாகம் செலுத்த நான் கடமைப்பட்டுள்ளேன். முதலாவதாக நான் அவருக்கு என் தசமபாகத்தைச் செலுத்தவேண்டும்' என்றேன். மேலும் நான், 'என்னுடைய அடுத்த கடமை, என்னுடைய கடன்களை செலுத்துவது, என் தந்தையும் வியாதியுள்ளவர்... எங்களுடைய குடும்பத்தில் நாங்கள் ஆக மொத்தம் பத்து பிள்ளைகள். என்னுடைய சம்பள நாளன்று நான் உங்களுக்கு இருபத்தைந்து செண்டுகள் கூட செலுத்த முடியாவிட்டால், உங்களிடம் வந்து 'என்னால் செலுத்த இயலவில்லை' என்று கூறி விடுவேன்' என்றேன். ஆனால் தேவனுடைய உதவியால் நான் எல்லா கடன்களையும் அவருக்கு செலுத்தி தீர்த்துவிட்டேன். கிறிஸ்து தமது சொந்த வார்த்தையில் வெளிப்படுகின்றார், ஆகஸ்ட் 22, 1965 காலை ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கென்று ஒரு சபை இருக்க வேண்டும். உனக்கென்று ஒரு ஸ்தலம் இருக்க வேண்டும். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அலைந்து கொண்டிருக் கிறவர்களாய் இருக்கக்கூடாது. ஆனால் எங்காவது ஒரு சபைக்கு போய், அது உன்னுடைய சபை என்று அழைக்க வேண்டும். எங்காவது நீ போய் உன்னுடைய தசமபாகத்தை செலுத்துகிறவனாக, எங்காவது போதனையை தாங்குகிறவனாக இருக்க வேண்டும். நீயாகவே அதை தெரிந்துகொள். ஆவியை பகுத்தறிதல் மார்ச் 8, 1960 அவள் தன்னுடைய அன்பை பகிர்ந்து கொண்டிருக்கிறாள். அவள் சபைக்குத் தரவேண்டிய தன்னுடைய தசமபாகத்தை எடுத்துக்கொள்வாள்; அவள் அதை அங்கே உலகத்தில் உள்ள மற்றக் காரியங்களுக்கு செலவிடுவாள். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம், ஜனவரி 21, 1962 தேவன் ஒழுங்கைக்கொண்டு வந்தபோது, அவர், 'லேவியர்களே, உங்கள் எல்லோரையும் நான் வெளியே அழைத்து, உங்களை ஆசாரியர்களாக்கினேன். மற்ற பன்னிரண்டு. இல்லை, பதினொன்று கோத்திரங்களிலுள்ள உங்கள் சகோதரர் அனைவருமே உங்களுக்கு தசம பாகம் செலுத்துவார்கள்.’ 'உங்களுக்கு ஒன்பது மரக்கால் ஆப்பிள் பழங்கள் கிடைத்தால், ஒரு மரக்கால் பழத்தை லேவியருக்கு கொட்டி விடுங்கள். உங்கள் ஆடு இங்கே இந்த அறையில் கடக்கப் பண்ணும்போது, பத்தாம் ஆட்டை தெரிந்து கொள்ளுங்கள். அது சிறிதானாலும், பெரிதானாலும், கொழுத்திருந்தாலும் மெலிந்திருந்தாலும் எனக்கு கவலையில்லை. அது லேவியருக்கு சொந்தமானது.' 'லேவியர்களே, இவையனைத்தும் நீங்கள் பெறும்போது, நீங்கள் கர்த்தருக்கு அதிலிருந்து தசமபாகம் செலுத்தவேண்டும்...' பரிசுத்த ஆவி என்பது என்ன?, டிசம்பர் 16, 1959 தசமபாகம் செலுத்தாமல் இருப்பதால் ஒரு கிறிஸ்தவனால் பரலோகம் செல்ல இயலாதா? என்னால் அதற்கு 'ஆம்' என்றோ அல்லது 'இல்லை' என்றோ கூற முடியவில்லை. ஆனால் நான் விசுவாசிப்பது என்னவென்றால் ஒவ்வொரு கிறிஸ்தவனும் தசமபாகம் செலுத்தக் கடமைப் பட்டுள்ளான். ஏனெனில் அது தேவனுடைய கட்டளையாகும், கற்பனையாகும், ஜீவ விருட்சத்தின் மேல், ஜீவனுக்கு அதிகாரமுள்ள வர்களாவதற்கும்... அவருடைய கற்பனைகளின் படியெல்லாம் செய்கிறவன் ஆசீர்வதிக்கப் படுவான்'. இப்பொழுது தசமபாகம் செலுத்துதல் என்பது ஒரு கிறிஸ்தவ அனுபவத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று என நான் விசுவாசிக்கிறேன். தேவன் தவறாகப் புரிந்து கொள்ளப்படுதல், ஜுலை 23, 1961 எபிரேயர், நிருபத்தில் 7ம் அதிகாரம் என்று நினைக்கிறேன். (அதை எழுதினது பவுல் என்று எண்ணுகிறேன்). அவன் ஆபிரகாமுக்கு நேர்ந்த மகத்தான சம்பவத்தை அங்கு குறிப்பிடுகிறான். ஆபிரகாம் ராஜாக்களை முறியடித்து திரும்பி வருகிறபோது, மெல்கிசேதேக்கு தசமபாகம் கொடுத்தான். மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டு போனபோது, லேவி தன் தகப்பனுடைய அரையிலிருந்தபடியால், அவன் தன் முப்பாட்டனாராகிய ஆபிரகாமின் மூலம் தசமபாகம் கொடுத்தான் என்று பவுல் கூறுகிறான் (எபி.7:9-10) இனி வரப்போகும் காரியங்கள், டிசம்பர் 5, 1965 இன்று அவர்கள் தேவனுடைய தசமபாகத்தின் இடத்தை எடுக்க முயற்சிக்கின்றனர். வேறெதோ ஒன்றை எடுக்க அவர்கள் முயற்சி செய்கின்றனர். அதை அவர்கள் வேறுவிதமாக ஆக்க முயல்கின்றனர். அவர்கள் சென்று சபைகளில் பங்கோ விளையாட்டு விளையாடுகின்றனர், லாட்டரி விளையாட்டு விளையாடுகின்றனர். தேவனுடைய தசமபாகத்தின் இடத்தை லாட்டரி எடுக்கவே முடியாது. இரவு விருந்துகள், கம்பளம் விற்றல், சுற்றுலாக்கள், கடன்களை அடைக்க நிதி திரட்டுதல், அவை தேவனுடைய நித்திய தசமபாகம் மற்றும் காணிக்கையின் இடத்தை எடுத்துக்கொள்ள முடியாது. அது அப்படியாக செய்யவே செய்யாது. ஆனால் இன்னுமாக நாம் அதை செய்ய முயற்சிகின்றோம். அது என்ன? அது தான் தேவனுடைய வார்த்தைக்கு பதிலாக எதோ ஒன்றை மாற்றுப்பொருளாக வைக்க கீழே வந்து முயற்சி செய்கின்ற நயவஞ்சக ஆவிகள். மயக்கியிழுக்கும் ஆவிகள், ஜூலை 24, 1955 ஒருவன் தனிப்பட்ட நபர் ஒருவருக்கு தசமபாகம் செலுத்த வேண்டுமா, அல்லது கிறிஸ்தவன் வேலை செய்ய வேண்டுமா? நிச்சயமாக, அவன் வேலை செய்ய வேண்டும் கிறிஸ்தவன் வேலை செய்யும் ஒரு மனிதாயிருப்பான். 'தனிப்பட்ட நபர் ஒருவருக்கு தசமபாகம் செலுத்த வேண்டுமா?' அந்த தனிப்பட்ட நபர் யாரென்பதை அது பொறுத்தது. அது உண்மை. எபிரெயர் 7-ம் அதிகாரத்தில், தசம பாகத்தைக் குறித்து முதன் முதலாக பேசப்படுகிறது. நாம் எந்த நிலையில்... ஒரு நிமிடம் பொறுங்கள், இரண்டாம் கேள்வி, இல்லை! உ, ஊ. இல்லை! ஏனெனில் சகோதரன், 'சகோ.பிரான்ஹாமுக்கு இரண்டு கேள்விகள்' என்று கூறியுள்ளார். அப்பொழுது... எபிரெயர் 7ம் அதிகாரத்தில் ஆபிரகாம் ராஜாக்களை முறியடித்து விட்டு திரும்பி வருகையில் மெல்கி சேதேக்கை சந்தித்து, அவனுக்கு தசமபாகம் செலுத்தினான். இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜா, சமாதானத்தின் ராஜா, நீதியின் ராஜா அது தேவனைத் தவிர வேறு யாருமில்லை. பாருங்கள்? ஆனால் நீங்கள் தசமபாகம் செலுத்தும்போது... உண்மையில் நீங்கள் எங்கு ஆகாரத்தைப் பெறுகிறீர்களோ, அங்கு தான் நீங்கள் தசமபாகம் செலுத்த கடன்பட்டிருக்கிறீர்கள். 'உங்கள் தசமபாகங்களை யெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள், அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகு மட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்க மாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (மல்:3:10) தசம பாகம் செலுத்தாத எந்த ஒரு மனிதனும் அல்லது ஸ்திரீயும் இதை ஏற்றுக்கொள்ளும்படி நான் சவால் விடுகிறேன். அதை நான் கண்டபோது, என்ன நடந்தது என்றும், நான் என்ன நிலையில் இருந்தேன் என்றும், காலை வரையில் இங்கு நின்று கொண்டு என்னால் உங்களிடம் கூறமுடியும். ஆனால் என்னால் கூடுமானவரையில் நான் விசுவாசமுள்ளவனாய் தசமபாகங்களை செலுத்தி வந்திருக்கிறேன். இந்த சபையில் இருந்து எனக்கு சேரவேண்டிய பணத்தை நான் எடுத்துக்கொள்ளும் போதும், அல்லது கூட்டங்களில் எனக்கு கூடுதல் கிடைக்கும் போதும் நான் தசமபாகம் கொடுக்கிறேன். நான் அதை ஊழியக்காரர்களுக்கு கொடுத்து விட்டு, கூட்டங்களில் கிடைக்கும் மற்றதை ஊழியக்காரர்களுக்கு கொடுக்கிறேன். அப்படி என்னால் செய்ய முடியாமல் போனால், நான் என்ன செய்கிறேன் என்றால், நான் பத்து சதவிகிதம் வைத்துக்கொண்டு தேவனுக்கு தொண்ணூறு சதவிகிதம் செலுத்தி வந்தேன். பிறகு அவ்விதம் நான் செய்யக்கூடாதென்று பிரமாணம் எனக்கு எடுத்துரைத்தபோது... அவ்விதம் நான் செய்தால் அது அதன் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அப்பொழுது நான் அதை எடுத்து வெளிநாடுகளில் நடக்கும் மிஷன் ஊழியங்களுக்கு அனுப்பி விட்டு, ஒரு வாரத்திற்கு நூறு டாலர் சம்பளம் வாங்கிக்கொண்டு, அதில் இருந்து என் தசம பாகத்தை செலுத்துகிறேன். ஆம், ஐயா! தசமபாகம் கொடுப்பதில் நான் நம்பிக்கை கொண்டவன். அது தேவனுடைய ஆசீர்வாதங்களில் ஒன்று, அது ஆசீர்வாதம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நீங்கள், 'அது பழைய ஏற்பாட்டில் உள்ள ஒன்று' எனலாம். அது புதிய ஏற்பாட்டில் உள்ள ஒன்றும் கூட! ஆம், ஐயா! கேள்விகளும் பதில்களும் (COD 2:20), ஆகஸ்டு 23, 1964 மாலை ஏனெனில், நீ விசுவாசிக்கிறேன் என்று சொல்லியும், தேவனுடைய வார்த்தை கற்பிப்பதை நீ கைக்கொள்ளாமற் போனால், நீ உண்மையாக விசுவாசிக்கவில்லையென்று அர்த்தமாகின்றது. அடையாளம், செப்டம்பர் 1, 1963 அவர்கள் பிரசங்கிக்குக் கொடுப்பதற்காக இரவு நேரங்களில் சென்று ஒரு சூப் ஆகாரத்தை சாப்பிட்டு கோழிக்கறி துண்டுகள் சிலவற்றை எடுத்து கொதிக்க வைத்து ஒரு தட்டு ஐம்பது செண்டுகளுக்கு விற்கின்றனர். ஆனால் இங்கே தேவனுடைய பிரமாணங்களுக்குக் கீழாக வருவீர்களானால், தேவனுடைய பரிசுத்த பிரமாணங்களுக்குக் கீழாக வந்து தேவனோடு நடப்பீர்களானால், நீங்கள் உங்கள் தசமபாகங்களை செலுத்துவீர்கள். அப்போது பிரசங்கி அருமையான காரியங்களைச் செய்வார், நீங்கள் மாத்திரம் அதைச் செய்வதற்காக தேவனுடைய வழியை எடுப்பீர்களானால் நல்லது. எல்லாவற்றையும் விட்டுவிடுதல், ஜனவரி 23, 1962 சகோதரன் பிரான்ஹாம், ஒரு கிறிஸ்தவன் என்று உரிமை கோரும் ஒவ்வொருவனும் தசமபாகங்களை செலுத்த வேண்டுமா, கர்த்தருடைய பண்டகசாலையிலே தங்கள் தசமபாகங்களை செலுத்த வேண்டுமா? இந்த கேள்விக்கான வேதவசனத்தை தயவுகூர்ந்து அளிக்கவும். சரி, உங்களால் கூடுமானால்... அது சரி, மல்கியா 4 ஆம் அதிகாரத்தில் வேதாகமம் அவ்வாறு கூறுகிறது, 'மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? (ஆங்கில வேதாகமத்தில் rob, திருட்டு என்று இருக்கிறது தமிழாக்கியோன்) எதிலே உம்மை வஞ்சித்தோம் (robbed திருடினோம்) என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே. உங்கள் தசமபாகம் மற்றும் காணிக்கைகளையும் என்னுடைய பண்டகசாலைக்கு கொண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங்கொள்ளாமற் போகும் மட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள்' என்று கர்த்தர் சொல்லுகிறார். அது எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் சவால் என்பதை நீங்கள் அறிய வேண்டும். மேலும் எனக்கு அந்நேரம்மட்டுமிருந்தால் நான் அடுத்த பத்து நிமிடத்திற்கு இந்த சிறிய வேத வசனங்களுக்கு சென்றிருக்க மாட்டேன், நான் என்னுடைய தனிப்பட்ட சாட்சியை கூற விரும்புகிறேன். எப்படி நானும் பசியாயிருந்தேன், என் தாய் மற்றும் அவர்கள் பசியாயிருந்தார்கள், மற்றும் எனது தந்தையின் சுகவீனமான ஒரு சூழல், ஆனாலும் முதலாவதாக எனது தசமபாகத்தை எடுத்து அதை கர்த்தருக்கு கொடுத்தேன். நீங்கள் கொடுத்து அதன்பிறகு நடப்பவைகளைப் பாருங்கள். எந்த ஒரு மனிதனோ அல்லது ஸ்திரீயோ, நீங்கள் வாரத்திற்கு ஒரு டாலர் மாத்திரமே சம்பாதித்து, அந்த பணத்தில் பத்து சென்டுகளை கொண்டு வந்து உங்களுடைய பண்டகசாலையில், நீங்கள் செல்லுகின்ற உங்கள் சபையில் கொடுத்து, தேவன் அதை ஆசீர்வதிக்கவில்லை யெனில் என்னை ஒரு மாய்மாலக்காரன் என்று கூறுங்கள். இப்பிப்பட்டதை என் வாழ்நாளில் இதுவரை நான் கண்டதேயில்லை ஆம், ஐயா. அது ஒவ்வொருவருக்கும் சவாலாகும். மேலும் ஒவ்வொரு கிறிஸ்தவனும்... அது மற்ற கேள்விக்கு செல்கிறது. ஒவ்வொரு கிறிஸ்தவனும் தசமபாகங்களை செலுத்த வேண்டும்! அது சரி. அதை செலுத்தித்தானாக வேண்டும். தேவன் தவறாகப் புரிந்து கொள்ளப்படுதல், ஜூலை 23, 1961 சகோ.பிரான்ஹாம் தசமபாகம் செலுத்துவதைக் குறித்து கூறியவைகளின் சாராம்சம்: • தசமபாகம் செலுத்தவேண்டும் என்பது கர்த்தருடைய ஒரு கட்டளை ஆகும். • அது கிறிஸ்தவ அனுபவத்திற்கு முக்கியமானது. • ஒவ்வொரு கிறிஸ்தவனும் தசமபாகம் செலுத்தக் கடமைப்பட்டுள்ளான். • தசமபாகம் சபையின் மேய்ப்பருக்கு செல்ல வேண்டும். தசமபாகத்தை வேறெதற்கும் உபயோகிக்கக் கூடாது. • தசமபாகத்தை எடுத்து விதவைகளுக்கு கொடுப்பது தவறு. • தசமபாகம் உங்களுடையதல்ல. அது தேவனுடையது. • முதலாவதாக தேவனிடம் நமக்குள்ள கடமை என்னவெனில் அவருக்கு தசமபாகம் செலுத்துவதாகும். முதலாவது தேவன். இரண்டாவது நம்முடைய குடும்பம், மூன்றாவது நாம். • தசமபாகம் செலுத்துவது புதிய ஏற்பாட்டு போதகமாகும்.